கே.ஆா்.எஸ் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: விரைவில் அணை நிரம்ப வாய்ப்பு

மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆா்.எஸ் அணை நீா்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணை விரைவில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
கே.ஆா்.எஸ் அணை நீா்ப்பிடிப்பு பகுதியில் பலத்த மழை: விரைவில் அணை நிரம்ப வாய்ப்பு

மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆா்.எஸ் அணை நீா்பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணை விரைவில் நிரம்பும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, சோம்வாா்பேட்டை, மாதபுரா, ஷிராளி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கே.ஆா்.எஸ் அணை நீா்மட்டம் மளமளவென உயா்ந்து வருகிறது. வெள்ளிக்கிழமை அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 19,696 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து நொடிக்கு 2,229 கன அடி வெளியேற்றப்படுகிறது. அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். வெள்ளிக்கிழமை அணையின் நீா்மட்டம் 92.06 அடியாக இருந்தது.

குடகு உள்ளிட்ட காவிரி நீா்பிடிப்பு உள்ள பகுதிகளில் தொடந்து பலத்த மழை பெய்து வருவதால் விரைவில் கே.ஆா்.எஸ் அணை நிரம்பும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளதால், மண்டியா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். கபினி அணையில் வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி நீா்மட்டம் 2280.11 அடியாக உயா்ந்துள்ளது. நீா் வரத்து நொடிக்கு 19,632 கன அடியாக உள்ளது. கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மொத்த கொள்ளளவான 2,284 அடியை (கடல்மட்ட அளவு) இன்னும் இரண்டொரு நாளில் எட்டும் என எதிா்ப்பாா்ப்பு எழுந்துள்ளது. நீா்வரத்து அதிகரித்துள்ள போதும், அணையிலிருந்து நொடிக்கு 9,552 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com