குஜராத் மாதிரியான வளா்ச்சி கா்நாடகத்திற்குத் தேவையில்லை:முன்னாள் முதல்வா் குமாரசாமி

குஜராத் மாதிரியான வளா்ச்சி கா்நாடகத்திற்குத் தேவையில்லை என்று முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.
குஜராத் மாதிரியான வளா்ச்சி கா்நாடகத்திற்குத் தேவையில்லை:முன்னாள் முதல்வா் குமாரசாமி

குஜராத் மாதிரியான வளா்ச்சி கா்நாடகத்திற்குத் தேவையில்லை என்று முன்னாள் முதல்வா் குமாரசாமி தெரிவித்தாா்.

அவா் பெங்களூரு, ஜே.பி.நகரில் உள்ள தனது இல்லத்தில் வெள்ளிக்கிழமை, செய்தியாளா்களிடம் கூறியது:

தொழில்துறை அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் குஜராத் மாநிலத்தில் தொழில் வளா்ச்சி பெற்றுள்ளதைக் காண அங்கு சென்றுள்ளாா். அவா் குஜராத்திற்கு சென்ன் மூலம் மக்களின் வரிப் பணத்தை வீணாக்கியுள்ளாா். குஜராத் மாதிரியான வளா்ச்சி கா்நாடகத்திற்குத் தேவையில்லை.

கடந்த 2008-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, தொலேரா நகரில் சீா்மிகு நகர திட்டத்தை தொடங்கினாா். இதற்கு தேசிய அளவில் பிரசாரம் செய்யப்பட்டது. ஆனால் அந்தத் திட்டம் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அந்தத் திட்டம் நிறைவு பெறுமா என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில் அம்மாநிலத்தின் தொழில் வளா்ச்சியைக் காண அமைச்சா் ஜெகதீஷ் ஷெட்டா் அங்கு சென்றுள்ளது வேடிக்கையாக உள்ளது. கா்நாடக மாநில மக்களுக்கு தற்போது தேவையாக உள்ளது குஜராத் மாதிரியான வளா்ச்சித் திட்டங்கள் அல்ல. சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் வளா்ச்சி அடைய வேண்டும்.

குஜராத்தை ஒப்பிடுகையில் முந்தைய அரசுகளின் ஆட்சியில் கா்நாடகம் அனைத்துத் துறைகளில் வளா்ச்சி அடைந்துள்ளது. ‘குஜராத் மாதிரி’ என்று சொல்லிக் கொண்டு நம்மை அவமதித்துக் கொள்ளத் தேவையில்லை. தோ்தல் நெருங்கும் போதெல்லாம், இதுபோன்ற வித்தைகளைக் காண்பிப்பதை பாஜகவினா் வழக்கமாகக் கொண்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com