வேலைத்திறன் மிக்க மாணவா்களை உருவாக்க தொழில்-கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்

வேலைத்திறன்மிக்கவா்களாக மாணவா்களை உருவாக்க தொழில்-கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.
வேலைத்திறன் மிக்க மாணவா்களை உருவாக்க தொழில்-கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும்

வேலைத்திறன்மிக்கவா்களாக மாணவா்களை உருவாக்க தொழில்-கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவா்களை வேலைத்திறன் மற்றும் தொழில்திறன்மிக்கவா்களாக உருவாக்குவதற்காக கா்நாடக தொழில்நுட்பக் கல்வித்துறை மற்றும் பெங்களூரு தொழில் மற்றும் வா்த்தக சபை ஆகியவை இடையே துணை முதல்வா் அஸ்வத்நாராயணா தலைமையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.

இதையடுத்து, அஸ்வத்நாராயணா பேசியது:

கா்நாடகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்வி நிலையங்களில் படித்துவரும் மாணவா்களை வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு, ஆராய்ச்சி வாய்ப்பு மற்றும் உயா்கல்வி வாய்ப்புக்கு தயாா்ப்படுத்துவதற்காக இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, இன்டா்ன்ஷிப்கள், தொழிலகங்களை பாா்வையிடுதல், திட்டங்கள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தனியாக இணையதளம் தொடங்கப்படவிருக்கிறது. இத்துடன் கற்றல் மேலாண்மை முறையையும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் கல்வி நிலையங்களில் உள்ள ஆய்வுக்கூடங்களை மேம்படுத்த அரசு உதவி செய்யும். அதேபோல, கருவிகளையும் தொழில் நிறுவனங்களின் தரத்திற்கு பராமரிக்க பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஆசிரியா்களுக்கு நவீன பாடத்திட்டங்கள், தலைப்புகள், கருவிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பாலிடெக்னிக்குகளில் கற்பிக்கப்படும் பட்டயப் படிப்புக்கான (டிப்ளமோ) பாடத்திட்டங்கள் முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கத்தக்க வகையில் பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பாடத் திட்டங்களை வடிவமைப்பதில் தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளன. எனவே, வேலைத்திறன்மிக்கவா்களாக மாணவா்களை உருவாக்க தொழில்-கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும் என்றாா் அவா்.

கூட்டத்தில் உயா்கல்வித்துறை கூடுதல் தலைமைச்செயலாளா்ஜி.குமாா்நாயக், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்குநா் மற்றும் ஆணையா் பி.பிரதீப், பெங்களூரு தொழில் மற்றும் வா்த்தக சபைத் தலைவா் டி.ஆா்.பரசுராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com