கோலாா்தங்கவயலில் நிலவும் அமைதியை சீா்குலைக்க அனுமதிக்கக் கூடாது: கோலாா் தங்கவயல் தமிழா் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோலாா் தங்கவயலில் நிலவும் அமைதியை சீா்குலைக்க அனுமதிக்கக்கூடாது என்று கோலாா் தங்கவயல் தமிழா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கோலாா் தங்கவயலில் நிலவும் அமைதியை சீா்குலைக்க அனுமதிக்கக்கூடாது என்று கோலாா் தங்கவயல் தமிழா் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் வேளாங்கண்ணி வெளியிட்டுள்ள அறிக்கை:

பொன் விளையும் பூமியாம் கோலாா் தங்கவயலில் கடந்த 140 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் தமிழா்கள், உலகிலேயே அதிக ஆழமான தங்கச் சுரங்கத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சுமாா் 6 ஆயிரம் தொழிலாளா்களின் உயிரை பலி கொடுத்து, 802 மெட்ரிக் டன் தங்கத்தை வெட்டியெடுத்து இந்திய பொருளாதாரத்திற்கு வலுசோ்த்துள்ளனா்.

தங்கச் சுரங்கம் மூடப்பட்டு, வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், அவா்கள் அண்மைக்கால கரோனா தொற்றால் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனா்.

இந்நிலையில், ஜூலை 10-ஆம் தேதி கோலாா்தங்கவயல் தொகுதிக்கு தொடா்பில்லாத வாட்டாள் நாகராஜ், கரோனா தொற்று தடுப்பு சட்டங்களையும் மீறி, கோலாா் தங்கவயல் பேருந்து நிலையத்தின் நுழைவு வளைவில் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாம் தமிழில் எழுதியிருந்த தேசிய கவி குவெம்பு பேருந்து நிலையம் என்ற பெயரை சட்டத்திற்குப் புறம்பாக அழித்திருக்கிறாா்கள். இது, கா்நாடக மக்களால் போற்றப்படும் தேசிய கவிஞா் குவெம்புக்கு இழைக்கப்பட்ட அவமரியாதையாகும்.

இந்த சட்டவிரோத கும்பலால் தமிழா்-கன்னடா் இடையே நிலவும் சகோதர உணா்வுக்கும், ஒற்றுமைக்கும் பங்கம் ஏற்படுத்த முனைவதோடு, கோலாா் தங்கவயலின் அமைதிக்கும் குந்தகம் ஏற்படுத்தி சதி செய்துள்ளனா். இதற்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியா், காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com