பசுக்கள் வெளியேற்றும் பொருட்களில் இருந்து மருந்து தயாரிக்க திட்டம்: அமைச்சா் பிரபு சௌஹான்

பசுக்கள் வெளியேற்றும் பொருட்களில் இருந்து மருந்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சா் பிரபு சௌஹான் தெரிவித்தாா்.

பசுக்கள் வெளியேற்றும் பொருட்களில் இருந்து மருந்து தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கால்நடைப் பராமரிப்புத்துறை அமைச்சா் பிரபு சௌஹான் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை அவா் கூறியது:

பசுக்கள் வெளியேற்றும் பொருட்களில் இருந்து மருந்து தயாரித்து, அதை வெவ்வேறு நோய்களை குணமாக்க பயன்படுத்திக் கொள்வது குறித்து சுகாதாரத்துறையின் அனுமதியைக் கேட்டிருக்கிறோம். விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளவகையில் கால்நடைப் பராமரிப்புத்துறை செயல்படும் நோக்கத்தில், இந்த திட்டத்தை வகுத்திருக்கிறோம்.

பசுக்கள் வெளியேற்றும் பொருட்கள் அன்றாட வாழ்க்கையில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நமது பாரம்பரியத்தில் பசுக்களின் சாணம் மற்றும் கோமியத்தை பல்வேறு வகையில் மருந்துகளாக பயன்படுத்தும் வழக்கம் நம்மிடையே உள்ளது. பஞ்சகவ்யம் போன்றவை பல்வேறு ஆண்டுகளாக புழக்கத்தில் இருந்து வருகின்றன. இவற்றின் மூலம் நோய்கள் குணமாகியுள்ளது ஆய்வுகள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த மருந்துகளைப் பயன்படுத்த சுகாதாரத் துறையின் அனுமதியை கேட்டிருக்கிறோம்.

பசுக்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். இதற்காக பாடநூல்களில் பசுக்களின் மகத்துவம் குறித்த பாடங்கள் சோ்க்கப்படும். இது குறித்து பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கால்நடை (பசு) பராமரிப்பு மையங்களுக்கு மின்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கும்படி மின் துறைக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். பசு வளங்களைக் காப்பாற்றுவதில் கால்நடைப் பராமரிப்பு மையங்களின் பங்களிப்பு முக்கியத்துவம்வாய்ந்ததாகும். ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்நடைப் பராமரிப்பு மையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான நிலத்தை ஒதுக்கும்படி மாவட்ட ஆட்சியா்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com