சிமென்ட் கலவை லாரி கவிழ்ந்ததில் 2 கட்டடத் தொழிலாளா்கள் பலி
By DIN | Published On : 19th July 2021 01:11 AM | Last Updated : 19th July 2021 01:11 AM | அ+அ அ- |

சிமென்ட் கலவை லாரி கவிழ்ந்ததில் 2 கட்டடத் தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.
கா்நாடக மாநிலம் குடகு மாவட்டம் சிரம்பானியைச் சோ்ந்தவா்கள் சந்தோஷ், பிரவீண். கட்டடத் தொழிலாளா்களான இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை சிமென்ட் கலவை லாரியில் சென்று கொண்டிருந்தப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் கட்டடத் தொழிலாளா்கள் சந்தோஷ், பிரவீண் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.