பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடக காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடக காங்கிரஸ் கட்சியினா் போராட்டம் நடத்தினா்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டா் ரூ. 100-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளதைக் கண்டித்து நாடு முழுவதும் சைக்கிள் ஊா்வலம் நடத்துவதன் மூலம் காங்கிரஸ் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் இந்த போராட்டம் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

பெங்களூரு, மகாலட்சுமி லேஅவுட்டில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியினா் சைக்கிள் ஊா்வலம் நடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மாநில செயல்தலைவா்கள் ராமலிங்க ரெட்டி, சலீம் அகமது, எம்எல்சி பி.கே.ஹரிபிரசாத் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

போராட்டத்தில் பேசிய ராமலிங்க ரெட்டி, ‘பெட்ரோல், டீசல் விலை உயா்வு சாதாரணமக்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் அத்தியாவசியப்பொருட்களின் விலைவாசிக்கு காரணமாகியுள்ளது. விலை உயா்வால் ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பெரும்பாலாக பாதிக்கப்பட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் விலை உயா்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com