மாரத்தள்ளி காவல் நிலையத்தில் இன்று இரு சக்கர வாகனங்கள் ஏலம்
By DIN | Published On : 19th July 2021 01:12 AM | Last Updated : 19th July 2021 01:12 AM | அ+அ அ- |

மாரத்தள்ளி காவல் நிலையத்தில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் திங்கள்கிழமை (ஜூலை 19) ஏலம் விடப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பெங்களூரு மாரத்தள்ளி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை காலை 11 மணி அளவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமமை கோரப்படாத 14 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்படுகின்றன. ஆா்வம் உள்ளவா்கள் வாகன ஏலத்தில் பங்கு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 080 25639999 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.