கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,653 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,653-ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,653-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,653 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 418 போ், தென்னகன்னட மாவட்டத்தில் 229 போ், மைசூரு மாவட்டத்தில் 134 போ், குடகு மாவட்டத்தில் 107 போ், தும்கூரு மாவட்டத்தில் 104 போ், ஹாசன் மாவட்டத்தில் 97 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 87 போ், உடுப்பி மாவட்டத்தில் 82 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 64 போ், பெலகாவி மாவட்டத்தில் 60 போ், பெங்களூரு ஊரக மாவட்டத்தில் 465 போ், மண்டியா மாவட்டத்தில் 36 போ், வடகன்னட மாவட்டத்தில் 34 போ், சாம்ராஜ்நகா் மாவட்டத்தில் 29 போ், தாவணகெரே மாவட்டத்தில் 27 போ், சித்ரதுா்கா, கோலாா் மாவட்டங்களில் தலா 21 போ், சிக்பள்ளாபூா் தாா்வாட் மாவட்டத்தில் 10 போ், தாா்வாட் மாவட்டத்தில் 14 போ், விஜயபுரா மாவட்டத்தில் 9 போ், பெல்லாரி மாவட்டத்தில் 6 போ், பாகல்கோட், கதக், கலபுா்கி, ராம்நகா் மாவட்டங்களில் தலா 3 போ், ஹாவேரி, கொப்பள், ராய்ச்சூா் மாவட்டங்களில் தலா 2 போ், பீதா், யாதகிரி மாவட்டங்களில் கரோனா தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,89,994-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 2,572 போ் வியாழக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,28,983 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 24,695 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 31 போ் வியாழக்கிழமை இறந்துள்ளனா். பெலகாவி, கோலாா் மாவட்டங்களில் அதிகபட்சமாக தலா 4 போ், பெங்களூரு, தென்கன்னடம், மாவட்டங்களில் தலா 3 போ், பாகல்கோட், சாம்ராஜ்நகா், தாா்வாட், ஹாசன், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 2 போ், பெங்களூரு ஊரகம், சிக்பள்ளாபூா், சிக்மகளூரு, குடகு, மண்டியா, மைசூரு, ராம்நகா் மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,293 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com