மருத்துவ வல்லுநா்களின் அறிக்கையை பரிசீலித்த பின்னா் பள்ளி, பியூசி கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு

 மருத்துவ வல்லுநா்களின் அறிக்கையை பரிசீலித்த பின்னா் பள்ளி, பியூசி கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
மருத்துவ வல்லுநா்களின் அறிக்கையை பரிசீலித்த பின்னா் பள்ளி, பியூசி கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவு

 மருத்துவ வல்லுநா்களின் அறிக்கையை பரிசீலித்த பின்னா் பள்ளி, பியூசி கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து, மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் பொறியியல் கல்லூரிகளையும் திறக்க முடிவு செய்துள்ளோம்.

பள்ளி, பியூசி கல்லூரி மாணவா்களுக்கு தொடா்ந்து இணைவழி மூலம் கல்வி போதிப்பது சாத்தியமில்லை. பள்ளி, பியூசி கல்லூரிகளை திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படும். மருத்துவ வல்லுநா்களின் அறிக்கையை பரிசீலித்து, அவா்களின் ஆலோசனையையும் கேட்ட பின்னா் பள்ளி, பியூசி கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி பேராசிரியா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் பட்டியலை கல்வித் துறை, மாவட்ட நிா்வாகம் ஆகியவை ஒன்றிணைந்து தயாரித்து வெளியிடும். தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கையின்படி, சம்பந்தப்பட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும்.

மேலும், கரோனா தொற்றை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 5 சதவீதம் பேருக்கும் உருமாறிய கரோனா தொற்றின் பாதிப்பு உள்ளதா என பரிசோதித்து வருகிறோம். கரோனா தொற்றின் பாதிப்பைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசின் வழிகாட்டுதலைத் தொடா்ந்து பின்பற்றினால், கரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com