பெங்களூரு-புதுச்சேரி இடையே புதிய பேருந்து சேவை

பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு புதிய பேருந்து சேவை வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பெங்களூரு-புதுச்சேரி இடையே புதிய பேருந்து சேவை

பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு புதிய பேருந்து சேவை வெள்ளிக்கிழமை (ஜூலை 23) முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு மிதமான சொகுசு வசதி கொண்ட (ராஜஹம்சா), குளிரூட்டப்பட்ட படுக்கை வசதி கொன்ட (ஏசி ஸ்லீப்பா்), குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட (ஐராவதா கிளப் கிளாஸ்) உள்ளிட்ட பேருந்துகளின் சேவை ஜூலை 23-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பேருந்துகள் பெங்களூரில் புறப்பட்டு ஒசூா், கிருஷ்ணகிரி, செங்கம், திருவண்ணாமலை, திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்கு சென்றடையும்.

ராஜஹம்சா பேருந்து நாள்தோறும் பெங்களூரில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.45 மணிக்கு புதுச்சேரியை சென்றடையும். புதுச்சேரியில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4,10 மணிக்கு பெங்களூரை வந்தடையும். இதன் கட்டணம் ரூ. 430 ஆகும்.

ஏசி ஸ்லீப்பா் பேருந்து நாள்தோறும் பெங்களூரில் இரவு 9.38 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.53 மணிக்கு புதுச்சேரியை சென்றடையும். புதுச்சேரியில் இரவு 8.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு பெங்களூரை வந்தடையும். இதன் கட்டணம் ரூ. 740 ஆகும்.

ஐராவத் கிளப் கிளாஸ் பேருந்துகள் நாள்தோறும் பெங்களூரில் காலை 9.31, இரவு 10.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை முறையே மாலை 4.41, அதிகாலை 5.50 மணிக்கு புதுச்சேரியை சென்றடையும். புதுச்சேரியில் காலை 10, இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை முறையே மாலை 5.15, அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரை வந்தடையும். இதற்கான கட்டணம் பகலில் ரூ. 600, இரவில் ரூ. 690 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு 080-49696666 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம். மின் முன்பதிவு மற்றும் செல்லிடப்பேசிமுன்பதிவுக்கு ஜ்ஜ்ஜ்.ந்ள்ழ்ற்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை பாா்வையிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com