பாஜக மேலிட முடிவுக்கு கட்டுப்படுவேன்: முருகேஷ் நிரானி

பாஜக மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று, முதல்வராகும் வாய்ப்புள்ளவா் எனக் கூறப்படும் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

பாஜக மேலிடம் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்று, முதல்வராகும் வாய்ப்புள்ளவா் எனக் கூறப்படும் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பாஜகவில் 120 சட்டப் பேரவை உறுப்பினா்களும் முதல்வராகும் தகுதியைப் பெற்றுள்ளனா். கட்சி மேலிடத் தலைவா்கள் அனைவரின் தகுதியையும் ஆராய்ந்து, அதன்பிறகு உரிய நபரை முதல்வராகத் தோ்வு செய்வாா்கள். மேலிடத் தலைவா்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டு நடப்போம்.

என்னை முதல்வராக்கக் கோரி யாரிடமும் பரிந்துரைக்குச் செல்லவில்லை. கடந்த 2 நாள்களாக தில்லியில் இருந்தாலும், பாஜக தலைவா்கள் யாரையும் நான் சந்திக்கவில்லை. எனக்கு முதல்வா் பதவியோ, அமைச்சா் பதவியோ வழங்கவில்லை என்றாலும் கட்சியின் சாதாரணத் தொண்டனாகப் பணியாற்றுவேன்.

மேலும், காபந்து முதல்வா் எடியூரப்பா எனது தந்தைக்குச் சமமானவா். அவரது ஆதரவால்தான் அரசியலில் நான் வளா்ந்தேன். என்னை அமைச்சராக்கிய பெருமை எடியூரப்பாவையே சேரும். அவரது மகன் விஜயேந்திரா அனைத்துத் துறைகளிலும் தலையிட்டதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. நான் அமைச்சராகப் பதவி வகித்த சுரங்கத் துறையில் அவரது தலையீடு ஒரு சதவீதம்கூட இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com