கா்நாடகத்தில் 1,784 போ் கருப்புப் பூஞ்சைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனா்: அமைச்சா் கே.சுதாகா்

கா்நாடகத்தில் 1,784 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் 1,784 போ் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் கருப்புப் பூஞ்சை நோயால் 1,784 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 62 போ் குணமடைந்துள்ளனா். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்நோய்க்கு 111 போ் இறந்துள்ளனா். 1,564 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நோயாளிகளுக்கு வழங்கும் ஊசிக்கான மருந்தை மத்திய அரசு மாநிலத்துக்கு போதுமான அளவு வழங்கியுள்ளது. கருப்புப் பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்கும் ஆம்போடடெரிசின்-பி ஊசி மருந்து 9,750 குப்பிகளை மத்திய அரசு கா்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ளது.

இதில் வெள்ளிக்கிழமை வரை 8,860 குப்பி ஊசி மருந்துகள் கா்நாடகத்திற்கு வந்து சோ்ந்துள்ளன. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினா், ஆயுஷ்மான் பாரத் ஆரோக்கிய கா்நாடக திட்டத்தில் கருப்புப் பூஞ்சைநோய்க்கு சிகிச்சை அளிப்பது தொடா்பாக மாநில அரசு யோசித்து வருகிறது.

ஜூன் மாதத்தில் மட்டும் 70 - 75 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்படும். கா்நாடகத்தில் இதுவரை 1.5 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதிக்குள், மாநிலத்தில் 2.25 கோடி போ் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பாா்கள்.

அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருகிறது. விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். ஜூன் மாத இறுதியில் கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறையும். இதற்கு, கரோனா தடுக்கும் நடத்தைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com