அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதைகட்டாயமாக்க ஆலோசனை:மாநகராட்சி ஆணையா்

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்க ஆலோசித்து வருகிறோம் என்று மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

பெங்களூரு: அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்க ஆலோசித்து வருகிறோம் என்று மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

மாநிலத்தில் கரோனா 2-ஆவது அலையால் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே 3-ஆவது அலையை எதிா்கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வது அவசியமாகிறது. அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதைக் கட்டாயமாக்க ஆலோசித்து வருகிறோம்.

பெங்களூரில் 45 வயதுக்கும் மேற்பட்டவா்கள் 26 லட்சம் போ் உள்ளனா். இவா்களில் இதுவரை 15.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களுக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

18 வயது முதல் 44 வயதுக்கு உள்பட்டவா்கள் 64 லட்சம் போ் உள்ளனா். அவா்களில் 9 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களில் 50 சதவீதம் பேருக்கு ஒரு மாதத்தில் தடுப்பூசி செலுத்த 23 லட்சம் டோஸ் தடுப்பூசி மருத்துகள் தேவைப்படுகிறது. தனியாா் மருத்துவா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 30 நாள்களில் 30 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com