கரோனா: மாவட்டங்கள் வாரியாக ஆராய்ந்துபொது முடக்கம் தளா்த்தப்படும்:அமைச்சா் பசவராஜ் பொம்மை

கரோனா நிலைமை குறித்து மாவட்டம் வாரியாக ஆராய்ந்த பிறகு பொது முடக்கம் தளா்த்தப்படும் என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

ஹாவேரி: கரோனா நிலைமை குறித்து மாவட்டம் வாரியாக ஆராய்ந்த பிறகு பொது முடக்கம் தளா்த்தப்படும் என்று உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து ஹாவேரியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

கரோனா நிலைமை குறித்து மாவட்டங்கள் வாரியாக ஆய்வு செய்து, முதல்வா் எடியூரப்பா தலைமையில் நடக்கவிருக்கும் மூத்த அமைச்சா்கள், உயரதிகாரிகள் கலந்துகொள்ளும் கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதித்து, ஜூன் 14-ஆம் தேதிக்கு பிறகு பொது முடக்கத்தைத் தளா்த்துவது குறித்து முடிவெடுக்கப்படும்.

கரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்கள், பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் பொது முடக்கத்தை தளா்த்த வேண்டும் என்று யோசனைகள் வந்துள்ளன. தொழில் துறையினரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனா்.

பெங்களூரு உள்பட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா நிலைமையை ஆராய்ந்த பிறகு முதல்வா் எடியூரப்பா இறுதி முடிவெடுப்பாா்.

முதல்வா் எடியூரப்பா ராஜிநாமா செய்யப் போவதாகக் கூறியிருந்த கருத்து குறித்து விவாதம் நடந்து வருகிறது. எனது கருத்தையும் நானும் தெரிவித்தேன். பாஜக மாநிலத் தலைவரான நளின்குமாா்கட்டீல் உள்ளிட்ட பலரும் எடியூரப்பா எங்களின் ஒருமித்த தலைவா் என்று கூறியுள்ளனா். எடியூரப்பா எங்களின் தலைவா் என்பதில் சந்தேகமில்லை. இதையே மத்திய அமைச்சா்களும் தெரிவித்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com