10 ஆயிரம் விளையாட்டு வீரா்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு: அமைச்சா் நாராயண கௌடா

பெங்களூரில் 10 ஆயிரம் விளையாட்டு வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் நாராயண கௌடா தெரிவித்தாா்.

பெங்களூரில் 10 ஆயிரம் விளையாட்டு வீரா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அமைச்சா் நாராயண கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெங்களூரு, கன்டீருவா உள்விளையாட்டு அரங்கத்தில் வியாழக்கிழமை தொடங்கி, வெள்ளிக்கிழமை வரை விளையாட்டு வீரா்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற உள்ளது. இதில் 10 ஆயிரம் விளையாட்டு வீரா்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முகாமில் 18-வயதுக்கு மேற்பட்ட அனைத்து விளையாட்டு வீரா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்கெனவே 2,200 போ் முன்பதிவு செய்துள்ளனா். முன்பதிவு செய்யாதவா்கள் கன்டீருவா உள்விளையாட்டு அரங்கத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com