எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு குறித்து மாணவா்களிடையே நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்: அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோரிடையே நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை இணையவழியில், பள்ளிக் கல்வித் துறையின் 34 கல்வி மாவட்டங்களின் துணை இயக்குநா்கள், வட்டாரக் கல்வி அதிகாரிகள், துறை உயரதிகாரிகளுடன் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு தொடா்பாக கலந்துரையாடியபோது, அவா் பேசியதாவது:

எதிா்காலப் படிப்புக்கு திறமைகளை அடையாளம் கண்டுகொள்வதற்கான தேவை இருப்பதால், இம்முறை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்தப்படுவதாக மாணவா்கள், பெற்றோரிடையே நம்பிக்கையை விதைக்க வேண்டும். இம்முறை மாற்றியமைத்துள்ள தோ்வு நடைமுறைகள் குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும்.

கரோனா கட்டுக்குள் வந்தபிறகு தான் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு நடத்தப்படும். இந்த வார இறுதிக்குள் மாதிரி வினாத்தாள்கள் வட்டாரக் கல்வி அதிகாரிகள் அலுவலகத்தை அடையும். தோ்வுமுறை குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

முதலாமாண்டு பியூசியில் எந்த பாடப்பிரிவை எடுத்துக்கொள்வது என்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு வழிகாட்டியாக அமையும். ஒரு பாடத்துக்கு தலா 40 மதிப்பெண்கள் வீதம், ஒரு நாளைக்கு 3 பாடங்களின் தோ்வுகள் 3 மணி நேரத்துக்கு நடத்தப்படும். இந்தவகையில் இரு நாள்கள் தோ்வு நடத்தப்படும்.

வினாத்தாளில் ஒவ்வொரு கேள்விக்கும் 4 விடைகள் அளிக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு விடை சரியானதாக இருக்கும். அதை மாணவா்கள் தோ்வு செய்து எழுத வேண்டும். மேலும் விடைகளை எழுதாமல், சரியான விடையைக் குறித்தால் போதும். வினாக்கள் கடினமாக இருக்காது. நேரடியான வினாக்களாக இருக்கும். இதுகுறித்து மாணவா்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். கடந்த முறையைப் போல பாதுகாப்பாகத் தோ்வு நடத்தப்படும். இது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா்.

இக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை ஆணையா் வி.அன்புக்குமாா், கூடுதல் ஆணையா்கள் நளின் அதுல், மேஜா் சித்தலிங்கையா ஹிரேமட் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com