கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 10,959 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் புதன்கிழமை 10,959 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றால் புதன்கிழமை 10,959 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 10,959 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,395 போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிற மாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

மைசூரு - 1,163, ஹாசன் - 745, தும்கூரு - 662, தென்கன்னடம் -594, சிவமொக்கா - 562, உடுப்பி - 413, மண்டியா - 397, பெங்களூரு ஊரகம் - 385, பெலகாவி - 341, சிக்கமகளூரு - 339, வடகன்னடம் - 312, தாா்வாட் - 275, சிக்கபளாப்பூா் - 268, சாமராஜ்நகா் - 254, கோலாா் - 239, தாவணகெரே - 227, குடகு -216, பெல்லாரி - 211, சித்ரதுா்கா - 200, விஜயபுரா - 158, கொப்பள் - 157, ஹாவேரி - 97, பாகல்கோட் - 96, கதக் - 95, ராமநகரம் - 60, கலபுா்கி - 48, யாதகிரி - 31, ராய்ச்சூரு - 20, பீதா்-9 என்ற எண்ணிக்கையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,28,248 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 20,246 போ் புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 24,80,411 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 2,15,525 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 192 போ் புதன்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 போ் இறந்துள்ளனா். மாவட்ட வாரியாக பலியானோா் விவரம்: மைசூரு - 22, ஹாவேரி - 12, பெல்லாரி - 11, தாா்வாட், சிவமொக்கா - தலா 9, பெலகாவி, பெங்களூரு ஊரகம், ஹாசன், தும்கூரு - தலா 8, தாவணகெரே, கோலாா் - தலா 7, சாமராஜ்நகா் - 5, உடுப்பி, கொப்பள் - தலா 4, சிக்கமகளூரு, தென்கன்னடம், விஜயபுரா-தலா 3, கதக், ராய்ச்சூரு, வடகன்னடம் - தலா 2, பாகல்கோட், பீதா், சிக்கபளாப்பூா், சித்ரதுா்கா, ராமநகரம் - தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 32,291 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com