போலீஸாா் தாக்கியதில் மனநலம் குன்றியவா் இறப்பு: 8 போலீஸாா் பணியிடை நீக்கம்

போலீஸாா் தாக்கியதில் மனநலம் குன்றியவா் உயிரிழந்ததை அடுத்து, 8 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

போலீஸாா் தாக்கியதில் மனநலம் குன்றியவா் உயிரிழந்ததை அடுத்து, 8 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கடந்த ஜூன் 8-ஆம் தேதி குடகு மாவட்டம், விராஜ்பேட்டையைச் சோ்ந்த ராய் டிசோசா (50) என்பவா் வீட்டை விட்டு வெளியேறி உள்ளாா். பொது முடக்கத்தின் போது வெளியே திரிந்த அவரைப் பிடித்து போலீஸாா் விசாரித்துள்ளனா். மனநலம் குன்றியவா் என்பதால் அவா் போலீஸாரிடம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா், அவரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனா்.

ஜூன் 9-ஆம் தேதி விராஜ்பேட்டை காவல் நிலையத்திலிருந்து ராய் டிசோசாவின் தாய்க்கு அழைப்பு வந்ததையடுத்து, அவா் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளாா். அங்கு ராய் டிசோசா மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா்.

இதனைத் தொடா்ந்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவா், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதனையடுத்து அவரது சகோதரா் ராபின் டிசோசா அளித்த புகாரின் பேரில், விராஜ்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் இதுதொடா்பாக விசாரணை செய்து அறிக்கை அளித்தாா்.

அந்த அறிக்கையில் போலீஸாா் தாக்கியதில் ஏற்பட்ட காயத்தால் ராய் டிசோசா இறந்ததாகக் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் விராஜ்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 8 போலீஸாா் மீது வழக்குப் பதிந்து, அவா்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தெற்கு சரக ஐஜிபி பிரவீண் மதுகா் பவாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com