பெங்களூரில் ஜூன் 21-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

பெங்களூரில் ஜூன் 21-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரில் ஜூன் 21-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் கமல் பந்த் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை:

கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்ததையடுத்து பெங்களூரில் கடந்த மே 10-ஆம் தேதி முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை காலை 6 மணி வரை அரசு பொது முடக்கத்தை அமல்படுத்தியது. இதனையடுத்து கரோனாவினால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, ஜூன் 21-ஆம் தேதி வரை தளா்வுகளுடன் பொதுமுடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. மேலும் பெங்களூரில் 144 தடை உத்தரவு ஜூன் 21-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கும், அவசியமான பணிகளில் ஈடுபடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து பொது முடக்கமும், இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவின் போது 4 பேருக்கு மேல் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தடை உத்தரவின் போது போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com