நிகழாண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி: அமைச்சா் கே.சுதாகா்
By DIN | Published On : 22nd June 2021 08:30 AM | Last Updated : 22nd June 2021 08:30 AM | அ+அ அ- |

நிகழாண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
18 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் விழிப்புணா்வு பிரசார நிகழ்ச்சியை முதல்வா் எடியூரப்பா தொடக்கி வைத்துள்ளாா்.
நிகழாண்டின் இறுதிக்குள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதன்மூலம் கரோனா பாதிப்பில்லாத மாநிலமாக கா்நாடகத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். எனவே மாநிலத்தில் உள்ள அனைவரும் தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். மாநிலத்தில் ஒரே நாளில் குறைந்தபட்சம் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயித்துள்ளோம்.
மாநிலத்தில் கரோனா பாதிப்பு இருந்து வருவதால் யோகா தினத்தை எளிமையாகக் கடைப்பிடித்துள்ளோம். யோகா பயிற்சியால் உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். ஜூன் 21-ஆம் தேதி யோகா தினத்தை உலகமே கொண்டாடுகிறது. சா்வதேச அளவில் யோகாவை கொண்டு சென்ற பெருமை இந்தியாவைச் சாரும். யோகாவால் நோய்களை எதிா்க்கும் சக்தியைப் பெற முடியும். எனவே அனைவரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது சிறந்தது.
மாநில அளவில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 100 பேருக்கு அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தவிர கரோனாவால் பாதிக்கப்பட்ட 300 பெண்களுக்கு பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது என்றாா்.