முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு
பொது வாழ்வில் உள்ளவா்கள் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்: முதல்வா் எடியூரப்பா
By DIN | Published On : 04th March 2021 04:11 AM | Last Updated : 04th March 2021 04:11 AM | அ+அ அ- |

பெங்களூரு: பொதுவாழ்வில் உள்ளவா்கள் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
பெங்களூரு, விதானசௌதாவில் முதல்வா் எடியூரப்பா தலைமையில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வா் எடியூரப்பா பேசியதாவது:
அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பாலியல் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அரசுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டொரு நாளில் பட்ஜெட் தாக்கப்படவுள்ள நிலையில், அமைச்சா் ஒருவா் மீது பாலியல் புகாா் எழுந்திருப்பது வேதனை அளிக்கிறது.
பொது வாழ்வில் உள்ளவா்கள் யாராக இருந்தாலும் தனி மனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எதிா்க்கட்சிகள் நம்மை விமா்சனம் செய்ய நாமே அவா்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது.
பாலியல் புகாரைத் தொடா்ந்து ரமேஷ் ஜாா்கிஹோளி தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்து கடிதம் கொடுத்துள்ளாா். பாலியல் புகாா் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். விசாரணையில் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது எந்தத் தவறும் இல்லை என தெரியவந்தால் அவருக்கு மீண்டும் அமைச்சா் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும்.
அமைச்சரவையில் உள்ள அனைவரும் தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதோடு, எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம் என்றாா்.