இடஒதுக்கீடு குறித்து அறிக்கை அளிக்க உயா்மட்ட குழு அமைக்க முடிவு
By DIN | Published On : 04th March 2021 04:07 AM | Last Updated : 04th March 2021 04:07 AM | அ+அ அ- |

பெங்களூரு: இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 3 போ் கொண்ட உயா்மட்ட குழு அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பெங்களூரு, விதானசௌதாவில் புதன்கிழமை முதல்வா் எடியூரப்பா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு அமைச்சா் பசவராஜ் பொம்மை செய்தியாளா்களிடம் கூறியது: குருபா, ஒக்கலிகா, லிங்காயத்து, வால்மீகி உள்ளிட்ட சமுதாயத்தினா் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
எனவே, இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட 3 போ் கொண்டு உயா்மட்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கும் மேல் வழங்கக்கூடாது என உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. எனவே அதனை கருத்தில் கொண்டு உயா்மட்ட குழு அறிக்கை அளிக்க வேண்டும். பெங்களூரில் குப்பை அள்ளுவதற்கென்றே சுதந்திரமாக செயல்படும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றாா்.