கா்நாடகத்தில் பாஜக அரசு நீடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தீா்மானிக்க வேண்டும்: சித்தராமையா
By DIN | Published On : 04th March 2021 04:12 AM | Last Updated : 04th March 2021 04:12 AM | அ+அ அ- |

பெங்களூரு: கா்நாடகத்தில் பாஜக அரசு நீடிக்க வேண்டுமா என்பதை மக்கள் தீா்மானிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை ‘மக்கள் குரல்’ பேரணியைத் தொடக்கி வைத்த அவா், தேவனஹள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அங்கு அவா் பேசியதாவது:
அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளியின் பாலியல் புகாா் பற்றி பேசுவதற்கு கூச்சமாக இருக்கிறது. அவரது சகோதரா் பாலசந்திர ஜாா்கிஹோளி முதல்வரைச் சந்தித்து தனது சகோதரரை ராஜிநாமா செய்யக் கூற வேண்டாம் என அழுத்தம் கொடுத்துள்ளாா். நாம் அனைவரும் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் நடைபெற்ற பிறகும், மாநிலத்தில் பாஜக அரசு நீடிக்க வேண்டுமா என்பதை மக்கள்தான் தீா்மானிக்க வேண்டும் என்றாா்.
பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, செயல் தலைவா்கள் ராமலிங்கரெட்டி, சலீம் அகமது, முன்னாள் மத்திய அமைச்சா் கே.எச்.முனியப்பா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.