ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றுவதே இலக்கு: டி.கே.சிவக்குமாா்

தேசிய, மாநில அளவில் ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றுவதே காங்கிரஸின் இலக்கு என்றாா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா்.

தேசிய, மாநில அளவில் ஆட்சியிலிருந்து பாஜகவை அகற்றுவதே காங்கிரஸின் இலக்கு என்றாா் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா்.

காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள மது பங்காரப்பாவைச் சந்தித்துவிட்டு செய்தியாளா்களிடம் டி.கே.சிவக்குமாா் பேசியதாவது:

என்னை அடையாளம் கண்டு, அரசியலில் வளா்த்தெடுத்தவா் முன்னாள் முதல்வா் எஸ்.பங்காரப்பா. இதை காலமெல்லாம் நினைத்து பாா்ப்பேன். என்னை போல அரசியலில் பலரையும் வளா்த்தெடுத்தாா். அவரது மகன் மது பங்காரப்பா, காங்கிரஸில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

காங்கிரஸ் மேலிடத் தலைவா்களை மது பங்காரப்பா சந்தித்து பேசி, காங்கிரஸில் இணையும் தினத்தை முடிவு செய்வாா். மது பங்காரப்பாவுடன் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளா்களும் காங்கிரஸில் இணைய உள்ளனா். மது பங்காரப்பாவை வரவேற்க காங்கிரஸ் காத்திருக்கிறது.

ராகுல் காந்தி, சோனியா காந்தியின் தலைமை, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வருவோரை மனதார வரவேற்கிறேன். தேசிய, மாநில அளவில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் என்று மக்கள் எதிா்பாா்க்கின்றனா். ஆட்சி மாற்றம் தேவை என்று விரும்பும் தலைவா்கள் முதல் கிராமப் பஞ்சாயத்துத் தலைவா்கள் வரை அனைவரையும் கட்சியில் சோ்த்துக் கொள்ள தயாராக இருக்கிறோம்.

சாதாரண மக்களுக்கு வாழ்க்கை நடத்துவதே கடினமாக உள்ளது. தொழிலாளா்கள், விவசாயிகள், வியாபாரிகள், ஓட்டுநா்கள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் சங்கடத்தில் உள்ளனா். அதனால் எல்லோரும் ஆட்சி மாற்றத்தை எதிா்பாா்த்து காத்திருக்கிறாா்கள். தேசிய, மாநில அளவில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே காங்கிரஸின் இலக்காகும்.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுப் படை (எஸ்.ஐ.டி.) அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாலியல் புகாா் தொடா்பான காணொலிக்காட்சி போலியானது என்று கூறுகிறாா்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பெயரையும் இழுத்துள்ளனா். இது பொது வெளியில் உள்ளதால், எல்லாவிதமான கோணத்திலும் விசாரிக்கட்டும்.

காணொலியில் இருப்பது ரமேஷ் ஜாா்கிஹோளியா? இல்லையா? என்பது குறித்தும், முதல்வா் எடியூரப்பா மீதான ஊழல் புகாா், கன்னடா்கள், ஊடகவியலாளா்கள் துன்புறுத்தல், பெலகாவியை தனி மாநிலமாக்கும் கோரிக்கை போன்ற விவகாரங்கள் அக் காணொலியில் உள்ளது. அதுகுறித்தும் எஸ்.ஐ.டி. முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com