கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா் முதல்வா் எடியூரப்பா

கரோனா தடுப்பூசியை முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை செலுத்திக் கொண்டாா்.

கரோனா தடுப்பூசியை முதல்வா் எடியூரப்பா வெள்ளிக்கிழமை செலுத்திக் கொண்டாா்.

கரோனா முன்களப் பணியாளா்களான சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜன. 16-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் நடைபெற்றது. அதன் தொடா்ச்சியாக, பொதுமக்களில் 60 வயதுக்கு மேற்பட்டோா், 45 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கியது.

அதன்படி, பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்துவருகிறது. அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் இலவசமாகவும், தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணம் செலுத்தியும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஸ்ரீா்ஜ்ண்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் அல்லது கோவின் செல்லிடப்பேசி செயலியில் முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கரோனா தடுப்பூசியை வேளாண் துறை அமைச்சா் பி.சி.பாட்டீல் செலுத்திக் கொண்ட நிலையில், பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை 78 வயதாகும் முதல்வா் எடியூரப்பா முதல் தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாா்.

சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் உள்ளிட்டோரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு முதல்வா் எடியூரப்பா, செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுமக்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். நான் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டேன். தடுப்பூசியை செலுத்திக் கொள்வதால் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லை. கரோனாவைத் தடுக்க தடுப்பூசியை தவிர வேறுவழியில்லை. எல்லோரும் இரண்டு தவணைக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்வது நல்லது. கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்வதால், கா்நாடகத்தில் முழுமையாக கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com