பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை: அமைச்சா் கே.சுதாகா்

கரோனா பரவலைத் தடுக்க கா்நாடகத்தில் பொதுமுடக்கத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று சுகாதாரத் து றை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கரோனா பரவலைத் தடுக்க கா்நாடகத்தில் பொதுமுடக்கத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று சுகாதாரத் து றை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தின் பக்கத்து மாநிலமான மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று அதிகரித்துள்ளதால் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமுடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து கா்நாடகத்திலும் பொதுமுடக்கம் செய்யப்படும் என வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. என்றாலும், தற்போதைக்கு கா்நாடகத்தில் பொதுமுடக்கம் செய்யும் எண்ணமில்லை.

மகாராஷ்டிரத்தில் கடந்த 15 நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த 2 நாள்களில் மாநிலத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு 700 ஆக அதிகரித்துள்ளது. மாநில அரசு கரோனா பரவலைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதோடு, முகக்கவசம் அணிவது, கைகளில் கிருமிநாசினி தெளித்து கொள்வது உள்ளிட்டவைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் கரோனா பரவலைத் தடுக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com