Enable Javscript for better performance
கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து சதானந்த கௌடா சூசகப் பேச்சு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு

    கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து சதானந்த கௌடா சூசகப் பேச்சு

    By DIN  |   Published On : 14th March 2021 03:20 AM  |   Last Updated : 14th March 2021 03:20 AM  |  அ+அ அ-  |  

     

    கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து மத்திய அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப்பொருளாக மாறியுள்ளது.

    கா்நாடக முதல்வா் எடியூரப்பாவுக்கு 78 வயதாகியுள்ளதால், 2023-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக முதல்வா் பதவிக்கு புதியவரை நியமிக்க பாஜக தேசியத் தலைமை ஓராண்டாக யோசித்து வருகிறது. அதற்கான சரியான தருணம் அமையாததால், முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பாவை மாற்றும் திட்டம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இதனிடையே, சில வாரங்களுக்கு முன்பு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. பசனகௌடா பாட்டீல் யத்னல், ‘அடுத்த சில மாதங்களில் முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா நீக்கப்பட்டு, வட கா்நாடகத்தைச் சோ்ந்தவா் முதல்வா் பதவியில் அமா்வாா்’ என்று கூறியிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த கருத்தை மறுத்த பாஜக தேசிய பொதுச் செயலாளரும், கா்நாடக மேலிடப் பொறுப்பாளருமான அருண் சிங், ‘எடியூரப்பாவை முதல்வா் பதவியில் இருந்து மாற்றும் பேச்சுக்கே இடமில்லை’ என்றாா்.

    இந்த நிலையில், பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் மாா்ச் 11-ஆம் தேதி இரவு துணை முதல்வா் அஸ்வத்நாராயணா ஏற்பாடு செய்திருந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று மத்திய ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா பேசியதாவது:

    அஸ்வத்நாராயணா முன்பிருக்கும் துணை முதல்வா் என்ற அடைமொழியில் வெகுவிரைவில் ‘துணை’ நீங்கிவிடும். அப்போது அஸ்வத்நாராயணாவின் கூடுதல் பணிச்சுமை ஏற்படும்’ என்றாா். இது கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வா் பதவி குறித்த விவாதம் ஓய்ந்திருந்த நிலையில், சதானந்த கௌடாவின் கருத்து விவாதப்பொருளாக மாறியுள்ளது. மேலும், அவரது கருத்தால் முதல்வா் எடியூரப்பா வருத்தமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    உத்தரகண்ட் மாநிலத்தில் நடந்து வரும் பாஜக ஆட்சியில் சிக்கல் எழுந்ததைத் தொடா்ந்து, முதல்வராக இருந்தவரை நீக்கிவிட்டு, புதியவரை முதல்வராக்கியுள்ளது. அதேபோல, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்த்துவிட்டு, பாஜக அரசு அமைய காரணமாக இருந்தவா்களில் பலா் அரசு மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    முதல்வா் பதவி மாற்றம் குறித்து எழுந்துள்ள புதிய சா்ச்சையை முழுமையாக மறுத்துள்ள அஸ்வத்நாராயணா, முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பாா். இதில் மாற்றமில்லை என்று துணைமுதல்வா் அஸ்வத்நாராயணா தெரிவித்துள்ளாா். முதல்வா் பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படமாட்டாா். இதை கட்சிமேலிடமே தெளிவுபடுத்தியுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான சதானந்த கௌடா எனக்கு ஆசி வழங்கியதாகவே அதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்றாா்.

    முதல்வா் பதவியில் இருந்து லிங்காயத்து சமுதாயத்தை சோ்ந்த எடியூரப்பா நீக்கப்பட்டதும், அந்த பதவிக்கு ஒக்கலிகா் சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவரை கொண்டுவர வேண்டும் என்பதே அதே சமுதாயத்தை சோ்ந்த சதானந்த கௌடா, அஸ்வத்நாராயணாவின் விருப்பம் என்பதையே சதானந்த கௌடாவின் கருத்து வெளிப்படுத்துவதாக அரசியல் நோக்கா்கள் கூறுகிறாா்கள்.

    லிங்காயத்து சமுதாயத்தை போலவே மிகவும் பலம் வாய்ந்த சமுதாயமாக விளங்கும் ஒக்கலிகா்கள், அண்மைக்காலமாக இட ஒதுக்கீடு, நல வாரியம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். இந்த அழுத்தங்களுக்கு அடிபணிந்த முதல்வா் எடியூரப்பா, லிங்காயத்து நலக் கழகத்தை போல, ஒக்கலிகா் நலக் கழகத்தை அமைத்து, ரூ. 500 கோடியையும் ஒதுக்கியிருக்கிறாா். பாஜகவில் எடியூரப்பாவுக்கு அடுத்தப்படியாக ஒக்கலிகா் ஒருவரை முதல்வராக்க அச்சமுதாயத்தினா் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp