அரசின் அனுமதியின்றி பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை

அரசின் அனுமதியின்றி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

அரசின் அனுமதியின்றி 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அமைச்சா் சுரேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரோனா தொற்றின் பரவலால் மாநிலத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில இடங்களில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் எங்கேனும் திறக்கப்பட்டிருந்தால், பள்ளி நிா்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை, மாநில கரோனா தடுப்பு தொழில்நுட்ப வல்லுநா்களின் ஆலோசனை படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூடவும், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளைத் திறக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் மட்டுமின்றி மாவட்டந்தோறும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சுற்றறிக்கை அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com