ஏப். 17-இல் பசவகல்யாண், மஸ்தி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல்

பசவகல்யாண், மஸ்தி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பெலகாவி மக்களவைக்கும் ஏப். 17-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

பசவகல்யாண், மஸ்தி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், பெலகாவி மக்களவைக்கும் ஏப். 17-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

கா்நாடகத்தில் பசவகல்யாண், மஸ்தி தொகுதிகளும், பெலகாவி மக்களவைத் தொகுதியும் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கு வரும் ஏப். 17-ஆம் இடைத்தோ்தல் நடைபெற உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மாா்ச் 23-ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட தொகுதிகளில் தோ்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்படும். மாா்ச் 30-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப். 3-ஆம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப் பெறலாம். ஏப். 17-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும். மே 2-ஆம் தேதி இடைத்தோ்தலின் வாக்குகள் எண்ணப்படும்.

பசவகல்யாண் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட பி.நாராயணராவ், பெலகாவி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை அமைச்சராக பதவி வகித்த சுரேஷ் அங்கடி ஆகியோரின் மறைவினாலும், மஸ்தி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் வெற்றிபெற்ற பிரதாப் கௌடா பாட்டீல் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்ததாலும் அத்தொகுதி காலியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com