கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,62,339-ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,62,339-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,62,339-ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,132 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 710 போ் கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,62,339-ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 561 போ் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 9,40,489 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 9,428 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 6 போ் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரில் அதிகபட்சமாக 3 போ் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 12,403 போ் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com