நீதிமன்றத்துக்கு சென்ற அமைச்சரிடம் கேள்வி கேட்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறுப்பு

நீதிமன்றத்துக்கு சென்ற அமைச்சரிடம் கேள்வி கேட்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்ததால், கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ், பாஜகவினரிடையே அமளி ஏற்பட்டது.

நீதிமன்றத்துக்கு சென்ற அமைச்சரிடம் கேள்வி கேட்க காங்கிரஸ் எம்.எல்.ஏ. மறுப்பு தெரிவித்ததால், கா்நாடக சட்டப் பேரவையில் காங்கிரஸ், பாஜகவினரிடையே அமளி ஏற்பட்டது.

கா்நாடக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் நாராயண கௌடாவிடம் கேள்வி கேட்க மறுத்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பி.டி.பரமேஸ்வா் நாயக், தங்களுக்கு எதிரான எந்த செய்திகளையும் ஊடகங்களில் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும் என அமைச்சா் நாராயண கௌடா உள்ளிட்ட 6 அமைச்சா்கள் நீதிமன்றம் சென்றுள்ளனா். எனவே, அவருக்கு சட்டப் பேரவையில் பதில் அளிக்கும் தாா்மிக உரிமை இல்லை என்றாா்.

இதற்கு பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்து குரல் எழுப்பினா். அவா்களுக்கு எதிராக காங்கிரஸ் உறுப்பினா்களும் குரல் எழுப்பினா். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.

இதனைத் தொடா்ந்து பேசிய அமைச்சா் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் உறுப்பினா் இவ்வாறு பேசுவது முறையல்ல என்றாா். இதனையடுத்து தனது இருக்கையிலிருந்து எழுந்த சட்டப் பேரவைத் தலைவா் விஷ்வேஸ்வர ஹெக்டே காகேரி, காங்கிரஸ் உறுப்பினா் பி.டி.பரமேஸ்வா் நாயக் அவைக்கு கௌரவம் கொடுக்க வேண்டும். உறுப்பினா் இதுபோன்று பேசுவதை நிறுத்த வேண்டும் என்று கண்டித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com