தமிழகத்துக்குச் செல்லும் சில ரயில் சேவைகள் நீட்டிப்பு

பண்டிகைகளையொட்டி தமிழகத்துக்கு இயக்கப்பட்ட சில ரயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பண்டிகைகளையொட்டி தமிழகத்துக்கு இயக்கப்பட்ட சில ரயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பண்டிகைகளையொட்டி தமிழகத்துக்கு இயக்கப்பட்ட சில ரயில்களின் சேவை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எஸ்.ஆா் பெங்களூரு-சென்னை இடையேயான அதிவேக ரயில்களின் (02607/02608), சேவை ஜூன் 30-ஆம் தேதி வரையும், சென்னை-கே.எஸ்.ஆா். பெங்களூரு இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (02657) ஜூலை 1-ஆம் தேதி வரையும், கே.எஸ்.ஆா். பெங்களூரு-சென்னை இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (02658) ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மைசூரு-மயிலாடுதுறை இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06232) ஜூன் 30-ஆம் தேதி வரையும், மயிலாடுதுறை-மைசூரு இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06231) ஜூலை 1-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-மைசூரு இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06235) ஜூலை 1-ஆம் தேதி வரையும், மைசூரு-தூத்துக்குடி இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06236) ஜூன் 30-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி-கே.எஸ்.ஆா். பெங்களூரு இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06525) ஜூலை 2-ஆம் தேதி வரையும், கே.எஸ்.ஆா். பெங்களூரு-கன்னியாகுமரி இடையேயான அதிவேக விரைவு ரயில் சேவை (06526) ஜூன் 30-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com