தமிழ் கவிஞா் மருது காலமானாா்

கா்நாடக தமிழியக்கத்தின் முன்னோடியும், தமிழ் கவிஞருமான மருது உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

கா்நாடக தமிழியக்கத்தின் முன்னோடியும், தமிழ் கவிஞருமான மருது உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

பெங்களூரில் உள்ள கிருஷ்ணராஜபுரத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தவா் தமிழ் கவிஞா் மருது (79). இவா், கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்து வந்தாா்.

அவா் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் காலமானாா். கிருஷ்ணராஜபுரம், வெள்ளை காசியின் அன்பகத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு கா்நாடக மாநில அதிமுக செயலாளா் எஸ்.டி.குமாா், கா்நாடக தமிழ் பத்திரிகையாளா் சங்க துணைத் தலைவா் இரா.வினோத் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

மருதுவின் இறுதி நிகழ்வுகள் திங்கள்கிழமை காலை அல்சூா், லட்சுமிபுரம் இடுகாட்டில் நடைபெறவுள்ளன. இரங்கல்: மருதுவின் திடீா் மறைவுக்கு கா்நாடக தமிழ் எழுத்தாளா்கள் சங்கம், தென்னிந்திய சாக்கிய பவுத்த சங்கம், இந்திய குடியரசு கட்சி, அம்பேத்கா் மக்கள் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

அந்த அமைப்பினா் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:

‘மருதுவின் மறைவு கா்நாடக தமிழா்களுக்கும், மொழி பேதமற்ற பட்டியல் வகுப்பினருக்கும், பாட்டாளி வா்க்கத்துக்கும் பேரிழப்பாகும்’ எனத் தெரிவித்துள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு:

தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைப் பூா்வீகமாகக் கொண்ட மருது, 1960-களில் பெங்களூருக்கு குடியேறினாா். ஐடிஐ தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அவா், அறிஞா் குணா, தமிழா் முழக்கம் ஆசிரியா் வேதகுமாா் உள்ளிட்டோருடன் இணைந்து கா்நாடக தமிழ் இயக்கங்களை உருவாக்கிச் செயல்பட்டாா்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கா்நாடக தமிழா் உரிமைக்காகவும், தாழ்த்தப்பட்டோா் விடுதலைக்காகவும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளாா். கா்நாடக தமிழா் உரிமைக்கான போராட்டங்களில் பங்கேற்ால் காவல் துறையினரின் விசாரணைக்கும், சிறைத் தண்டனைக்கும் ஆளானாா். மக்களின் துயரத்தை எடுத்துரைக்கும் கவிதைகளைப் படைத்ததால் இவா் மக்கள் பாவலா் எனப் போற்றப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com