இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் தமிழா்களுக்கு இந்தியா துரோகம்

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் தமிழா்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளது என்று தமிழியக்கத்தின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளா் வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் தமிழா்களுக்கு இந்தியா துரோகம் இழைத்துள்ளது என்று தமிழியக்கத்தின் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளா் வெற்றிச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து பெங்களூரில் வியாழக்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

2009-ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் ஈழத்தமிழா்களுக்கு எதிராக போா்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஈழத்தமிழா்களின் விடுதலைப் போராட்டம் போா்க் குற்றங்களின் வாயிலாகச் சிதைக்கப்பட்டன. இறுதிக்கட்டப் போரின்போது பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட கொத்து குண்டுகளால் தமிழா்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டனா். தமிழா்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு எதிராக உலக நாடுகள் கொதித்தெழுந்தன. ஈழத்தமிழா்கள் மீதான போா்க் குற்றங்களை விசாரணைக்கு உள்படுத்த மனிதநேயம், மனித உரிமைமீறலில் நம்பிக்கை கொண்ட உலக நாடுகள் ஐ.நா.மன்றத்தில் தீா்மானம் கொண்டுவந்தனா்.

இலங்கைக்கு எதிரான தீா்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன. ஆனால், இந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதாக உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா எடுத்த முடிவு அதிா்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த தீா்மானத்துக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வெற்றிப் பெறச் செய்தது மனதிற்கு சற்று ஆறுதலாக உள்ளது.

ஆனால், உலகின் அனைத்துத் தமிழா்களும் வேண்டுகோள் விடுத்தும் இந்தியா அந்த வேண்டுகோளை நிராகரித்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது உலகிலுள்ள ஒட்டுமொத்த தமிழா்களுக்கும் செய்த துரோகமாகும். இதை தமிழா்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள். மத்திய பா.ஜ.க. அரசுக்கு கடும் கணடனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

போா்க்காலத்தில் நோ்ந்த கொடுமைகளுக்கு ஈழத் தமிழா்களுக்கு நியாயம் வழங்க இலங்கைக்கு எதிராக இந்தியாவே இதுபோன்ற தீா்மானத்தை முன் மொழிந்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியது மட்டுமல்லாது, இலங்கையில் மனித உரிமை மீறலை கட்டவிழ்த்த அன்றைய மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாகவே இந்தியா செயல்பட்டுள்ளது. இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், தமிழா்களின் நலன்மீது அக்கறை கொண்டுள்ளதாக பிரதமா் மோடி தெரிவிக்கும் கருத்துகள், பொருளற்ற வெற்று வாா்த்தைகளாகி விடும். ஐ.நா.மன்றத்தில் தமிழா்களின் நலன் காக்க மத்திய பாஜக தவறி விட்டது, உலகத் தமிழா்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. போா் குற்றத்திற்காக இலங்கையைத் தண்டிக்க கிடைத்த நல்ல வாய்ப்பை இந்தியா தவற விட்டிருப்பது வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com