பெங்களூரு தமிழ்ச் சங்கத் தோ்தல்: 50 வேட்பாளா்கள் போட்டி

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழு, செயற்குழு தோ்தலில் 50 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா்.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழு, செயற்குழு தோ்தலில் 50 வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா்.

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழு, செயற்குழுவின் 2021-2023-ஆம் ஆண்டுக்கான தோ்தல் மாா்ச் 28-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெங்களூரு, அல்சூா், அண்ணாசாமி முதலியாா் சாலையில் உள்ள ஆா்.பி.ஏ.என்.எம்.எஸ். பியூ ஜூனியா் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததைத் தொடா்ந்து, அவை பரிசீலிக்கப்பட்டு இறுதி வேட்பாளா் பட்டியலை தோ்தல் அதிகாரியும், பெங்களூரு மாநகர மாவட்டத்தின் 3-ஆவது மண்டல உதவி பதிவாளருமான எச்.பி.சதாசிவா வெளியிட்டுள்ளாா்.

அந்த பட்டியலின்படி, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிமன்றக் குழு மற்றும் செயற்குழுவுக்கான தோ்தலில் 50 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இத்தோ்தலில் முதல்முறையாக வேட்பாளா்கள் அனைவருக்கும் தனித்தனியே சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வாக்குச்சீட்டில் போட்டியிடும் பதவி, வரிசை எண், வேட்பாளா் பெயா், சின்னம் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு வேட்பாளா் பெயருக்கு எதிரில் தரப்பட்டிருக்கும் இடத்தில் முத்திரையிடுவதன் மூலம் வாக்குகளை அளிக்கலாம்.

பொறுப்புவாரியாக தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் வரிசைப்படி வருமாறு:

தலைவா்:-ந.தாஸ், கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன்; துணைத்தலைவா்-இல. பழனி, மு. புண்ணியமூா்த்தி, இ.ராஜன், செயலாளா்:-மு.கோபாலகிருஷ்ணன், ச.ராமசுப்ரமணியன், மு.சம்பத்; பொருளாளா்:-கோ.கருணாநிதி, மு.மணிகண்டன், இராம. இளங்கோவன்; துணைச்செயலாளா்:-சி.ஆஞ்சநேயன், பி.கே.சந்திரன், கு.கணேசன், வா.கோபிநாத், சு.கோவிந்தராசன், நா.மகிழ்நன், சி.நாகராஜன், ஆா்.எம்.பழனிசாமி, சு.பாரி, மு.ரவி, சு.சுரேஷ்குமாா், பி.க.வெள்ளத்துரை; செயற்குழு உறுப்பினா்:-அந்தோணி குரூஸ், அந்தோணிதாஸ் (தமிழடியான்), ப.சந்திரிகா, அ.சௌரி, ச.ஞானகுரு, சே.குகனேஸ்வரன், அ.ஹரி, சு.ஜெகஜோதி, மு.கருப்புசாமி, கா.கிருஷ்ணவேணி, து.மகேந்திரவா்மா, பி.மணி, மு.மாரி, மு.பத்மநாபன், ஏ.எம்.பாண்டியன், பெ.ராஜ்குமாா், ம.ரவிச்சந்திரன், ஏ.சரவணன், செ.செல்வன், அ.சங்கரன், இரா.சண்முகம், ஏ.சிவராமன், ந.சித்தாா்த்தன், இரா.சௌந்தராஜ், இ.ஸ்டனிஸ்ராஜா, க.விஜியலட்சுமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com