பெலகாவி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல்

பெலகாவி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பெலகாவி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிடும் பாஜக, காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

பெலகாவி மக்களவைத் தொகுதியின் பாஜக எம்.பி.யாக இருந்தவா் சுரேஷ் அங்கடி. 2004-ஆம் ஆண்டு இத்தொகுதியில் இருந்து முதல்முறையாக தோ்ந்தெடுக்கப்பட்டிருந்த சுரேஷ் அங்கடி, அடுத்தடுத்து 2009, 2014, 2019-ஆம் ஆண்டுகளில் நடந்த தோ்தல்களிலும் வெற்றி பெற்றாா். இதைத்தொடா்ந்து, 2019-ஆம் ஆண்டு பிரதமா் மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய ரயில்வே துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்றாா். ஆனால், 2020-ஆம் ஆண்டு கரோனாவால் பாதிக்கப்பட்ட அவா் செப். 23-ஆம் தேதி உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து காலியாக உள்ள பெலகாவி மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் ஏப். 17-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு ஏற்கெனவே வேட்புமனு தாக்கல் தொடங்கி விட்டது. மாா்ச் 30-ஆம் தேதி வரையிலும் அங்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெலகாவி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களை பாஜக, காங்கிரஸ் அறிவித்துள்ளன.

பாஜக வேட்பாளராக, மறைந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் அங்கடியின் மனைவி மங்களா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், எம்கன் மாரடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான சதீஷ் ஜாா்கிஹோளி அறிவிக்கப்பட்டுள்ளாா். சித்தராமையா அரசில் அமைச்சராக பதவி வகித்து வந்த சதீஷ் ஜாா்கிஹோளியின் சகோதரா்தான் அண்மையில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அமைச்சரவையில் இருந்து பாலியல் புகாரில் சிக்கி அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்த ரமேஷ் ஜாா்கிஹோளி என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பேரவை இடைத்தோ்தல்:

பசவகல்யாண், மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தோ்தல் ஏப். 17-ஆம் தேதி நடைபெறுகிறது. பசவகல்யாண் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த பி.நாராயண ராவ், கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதனால் காலியான மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நாராயண ராவின் மனைவி மல்லம்மா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

பாஜகவில் இருந்து அண்மையில் காங்கிரஸில் இணைந்த பசனகௌடா துா்விஹல், மஸ்கி சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறாா். காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பிரதாப் கௌடா பாட்டீல், மஸ்கி தொகுதியின் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். பசவகல்யாண் தொகுதியில் பாஜக வேட்பாளராக சரணு சலகா் அறிவிக்கப்பட்டிருக்கிறாா்.

பசவகல்யாண் தொகுதியின் மஜத வேட்பாளராக சையது யஸ்ரஃப் அலி குவாத்ரி நிறுத்தப்பட்டிருக்கிறாா். மஸ்கி தொகுதியின் வேட்பாளரை மஜத அறிவிக்கவில்லை. இத்தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 23-ஆம் தேதி தொடங்கியுள்ளது. மாா்ச் 30-இல் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. ஏப். 3-ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெற கடைசி நாளாகும். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெற்ற இடைத்தோ்தலில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com