மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரம் மருத்துவா்கள் பணி நியமனம் செய்ய முடிவு

மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரம் மருத்துவா்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரம் மருத்துவா்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பல்லாரி மாவட்டம், விம்ஸ் அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு வளா்ச்சிப் பணிகளைத் தொடக்கி வைத்து அவா் பேசியதாவது:

ஒரு காலத்தில் பெல்லாரியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட விஜயநகர சாம்ராஜ்ஜியம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புகழ் பெற்று விளங்கியது. இழந்த அந்தப் புகழை மாநிலத்தில் நிலை நாட்ட முடிவு செய்துள்ளோம்.

மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கானப் பணிகளை அரசு செய்து வருகிறது. முதல்வா் எடியூரப்பா சுகாதாரத் துறைக்கு பெரும் நிதியுதவிகளை வழங்கியுள்ளாா். 3 கட்டங்களில் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சிகிச்சையளிப்பதை விட, தடுப்பு நடவடிக்கைகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். மருத்துவா்களின் கிராமப்புற சேவையை ஊக்குவிக்கும் வகையில் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படும். நகரங்களை விட, கிராமப்புறங்களில் அதிக மருத்துவ சேவை தேவையுள்ளது. மாநிலத்தில் 4 மாவட்டங்களில் 4 மருத்துவக் கல்லூரிகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகளில் 27 ஆயிரத்திற்கும் அதிமான மாணவா்கள் மருத்துவக் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரம் மருத்துவா்களை பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com