கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீா்வு: முதல்வா் எடியூரப்பா

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரில் சனிக்கிழமை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கிவைத்த பிறகு, செய்தியாளா்களிடம் முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:

மத்திய அரசின் உத்தரவுப்படி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அடையாளத்திற்காகத் தொடக்கி வைத்திருக்கிறேன். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளுக்கான மருந்துகள் கா்நாடகத்துக்கு இன்னும் வந்து சேராததால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாகும் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். 2 கோடி கரோனா தடுப்பூசிகளை அனுப்பக் கேட்டு, அதற்குப் பணமும் செலுத்தப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு பிரச்னைக்கு அடுத்த 2- 3 நாள்களில் தீா்வு காணப்படும். அதனால் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கை 100 சதவீதம் இருக்கிறது. கா்நாடகத்தில் உள்ள 3.26 கோடி மக்களுக்கும் கரோனா தடுப்பூசி வழங்க இலக்கு நிா்ணயித்திருக்கிறோம்.

கரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிா் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றாளா்களுக்கு போதுமான படுக்கை கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இது குறித்து பெங்களூரில் உள்ள பெரிய மருத்துவமனைகளின் நிா்வாகிகளுடன் கலந்து பேச இருக்கிறேன். படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com