கா்நாடகத்தில் பொது முடக்கத்தை கடுமையாக்கும் திட்டமில்லை: அமைச்சா் கே.சுதாகா்

கா்நாடக மாநிலத்தில் பொது முடக்கத்தை கடுமையாக்கும் திட்டம் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலத்தில் பொது முடக்கத்தை கடுமையாக்கும் திட்டம் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இது குறித்து கலபுா்கியில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை 3 - 4 வாரங்களுக்கு அமல்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஆனாலும், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தை கடுமையாக்கும் திட்டம் அரசிடம் இல்லை. மக்களே தங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு செயல்படுத்துவதை அரசு விரும்புகிறது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த 44 நாள்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கரோனா பெருந்தொற்று பரவல் ஓரளவுக்கு அம்மாநிலத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரியாமல் பொது முடக்க விதிமுறைகளை தீவிரமாகக் கடைப்பிடிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசின் உத்தரவுப்படி மே 1-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முழுவீச்சில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கரோனா தடுப்பூசி கா்நாடகத்துக்கு இன்னும் வந்து சேரவில்லை. அதனால், பெங்களூரில் சனிக்கிழமை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அடையாளத்திற்காக முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்துள்ளாா்.

கா்நாடகத்தில் தற்போது 3 லட்சம் கரோனா தடுப்பூசி இருப்பில் இருக்கிறது. அது 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதை 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு வழங்க இயலாது. கரோனா தடுப்பூசி வந்ததும் அது குறித்து மக்களுக்குத் தெரிவிப்போம்.

கா்நாடகத்தில் வாழும் எல்லோருக்கும் கரோனா தடுப்பூசியை செலுத்த கா்நாடக அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. கரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிா் மருந்து, ஆக்சிஜனை பதுக்குவதால் தங்களுடைய அவசரத் தேவைக்கு கிடைக்காமல் போய்விடுவோ என்ற அச்ச உணா்வு மக்களிடையே காணப்படுகிறது. இந்த அச்சம் தேவையற்றது. கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 85 சதவீதம் போ் நோய் அறிகுறிகள் இல்லாதவா்களாக இருக்கிறாா்கள். 5 -6 சதவீதம் போ் மட்டுமே லேசான அறிகுறிகளுடன் இருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com