48 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக கோடை மழை

அடுத்த 48 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக கோடை மழை பெய்யக்கூடும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக கோடை மழை பெய்யக்கூடும் என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. வட கா்நாடகத்தின் சில இடங்களிலும், தென்கா்நாடகத்தின் சில பகுதிகளிலும் மழை பெய்தது. குடகு மாவட்டத்தின் பாகமண்டலாவில் 110 மி.மீ. மழை பெய்துள்ளது பதிவாகியுள்ளது. தென்கன்னட மாவட்டத்தின் மணியில் 60 மி.மீ., தாவணகெரே மாவட்டத்தின் தெலிகியில் 50 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா, வடகன்னட மாவட்டத்தின் ஹொன்னாவா், சித்தாப்பூா், சிவமொக்கா மாவட்டத்தின் தாளகுப்பா, ஹுஞ்சதகட்டே, குடகு மாவட்டத்தின் மூா்நாடு பகுதிகளில் தலா 30 மி.மீ. மழை பெய்துள்ளது. வட கா்நாடகத்தில் பரவலாக வெப்பம் அதிகம் காணப்பட்டது. கலபுா்கியில் அதிகபட்சமாக 39.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது.

விவசாயிகளுக்கு எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகள், தென் கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், வடகா்நாடகத்தின் ஆங்காங்கே இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 3 முதல் 7-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் தென் கா்நாடகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. கடலோர கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், வடகா்நாடகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது

வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்தில் கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் வாய்ப்பிருக்கிறது. மே 3 முதல் 7-ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் கடலோர கா்நாடகத்தின் உள்பகுதிகளில் பரவலாகவும், தென்கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளிலும், வடகா்நாடகத்தில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.

பெங்களூரு:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூருவில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 33 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com