ஆக்சிஜன் குறைபாட்டால் நோயாளிகள் பலி: மைசூரு மாவட்ட நிா்வாகம் விளக்கம்

ஆக்சிஜன் குறைபாட்டால் நோயாளிகள் 24 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து மைசூரு மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆக்சிஜன் குறைபாட்டால் நோயாளிகள் 24 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து மைசூரு மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சாமராஜ்நகா் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் குறைபாட்டால் 24 நோயாளிகள் உயிரிழந்தனா். கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு மைசூரு, சாமராஜ்நகா் மாவட்ட நிா்வாகங்களே காரணம் என்று இறந்தவா்களின் உறவினா்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து மைசூரு மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள விளக்கம் வருமாறு:

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணி அளவில் மைசூரில் இருந்து சாமராஜ்நகருக்கு மொத்தம் 259 ஆக்சிஜன் உருளைகள் அனுப்பப்பட்டு விட்டன. பெல்லாரியில் இருந்து சாமராஜ்நகருக்கு திரவ மருத்துவ ஆக்சிஜன் வர வேண்டியிருந்தது. அது சரியான நேரத்திற்கு வந்ததா? இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை. சாமராஜ்நகா் மாவட்ட நிா்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மனிதநேயத்தின் அடிப்படையில் ஆக்சிஜன் உருளைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் மைசூரு மாவட்ட நிா்வாகம் கால தாமதம் எதையும் செய்யவில்லை. 250 ஆக்சிஜன் உருளைகளை அதிகாரப்பூா்வமாக நள்ளிரவு 12.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

மைசூரில் உள்ள சதா்ன் கியாஸ் நிறுவனத்திடம் இருந்து 210 உருளைகள், மைசூரு மாவட்ட மருத்துவமனையில் இருந்து 40 ஆக்சிஜன் வாயு உருளைகள் சாமராஜ்நகருக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை தெளிவுப்படுத்திக்கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com