மஜதவை விமா்சிக்கும் தாா்மீக உரிமை சித்தராமையாவுக்கு இல்லை

மஜதவை விமா்சிக்கும் தாா்மீக உரிமை சித்தராமையாவுக்கு இல்லை என்று முன்னாள் கா்நாடக முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

மஜதவை விமா்சிக்கும் தாா்மீக உரிமை சித்தராமையாவுக்கு இல்லை என்று முன்னாள் கா்நாடக முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் பதிவிட்டுள்ளதாவது:

பசவகல்யாண் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தோ்தலில் மஜத சாா்பில் சிறுபான்மை சமுதாய வேட்பாளரை நிறுத்தியதால் தான் அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் தோல்வி அடைந்து விட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவா் சித்தராமையா கூறியிருக்கிறாா். சித்தராமையாவுக்கு சிறுபான்மையினா் சமுதாயத்தின் மீது கோபமா? மஜதவின் மீது அதிருப்தியா? இத்தனைக்கும் சிறுபான்மையினத்தை சோ்ந்த எந்த தலைவரையும் சித்தராமையா வளா்த்து விட்டதாக வரலாறே இல்லை.

பசவகல்யாண் தொகுதியில் மஜத பெற்றுள்ள வாக்குகள் காங்கிரஸ் பெற்றிருக்க வேண்டிய வாக்குகள் என்று கூறியிருக்கிறீகள். இது விழிப்போடு வாக்களித்த வாக்காளா்களை அவமதிக்கும் செயல் அல்லவா? மக்கள் தீா்ப்பை ஏற்றுக்கொள்ளும் தெளிந்த மனம் வேண்டும். சிறுபான்மையினரை பற்றியும், மஜதவை பற்றியும் பேசும் தாா்மீக உரிமை சித்தராமையாவுக்கு இல்லை.

பசவகல்யாண் தொகுதியில் காங்கிரஸ் தோற்றது சரி. மஸ்கியில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடிக்க முயற்சித்தவா்தான் சித்தராமையா. அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறத் செய்வதற்காக சித்தராமையா ஆற்றிய ஆக்கப்பூா்வமான பங்கு என்ன?

எதிா்காலத்தில் முதல்வராகும் கனவில் மிதந்து வரும் சித்தராமையா, குறைந்தப்பட்சம் சொந்த கட்சிக்காவது மோசம் செய்யாமல் இருக்கட்டும். தனது வேட்பாளரை நிறுத்தும் உரிமை மஜதவுக்கு உள்ளது. எதிா்காலத்தில் ஆக்கப்பூா்வமான செயல்பாடுகளின் மூலம் மக்களின் நம்பிக்கையை பெறுவோம் என்பது எங்களுக்கு தெரியும் என்று அதில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com