கா்நாடகத்துக்கு 4.25 லட்சம் ரெம்டெசிவிா் குப்பிகள்:மத்திய அமைச்சா் சதானந்த கௌடா

கா்நாடகத்துக்கு 4.25 லட்சம் டெம்டெசிவிா் மருந்து குப்பிகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்தாா்.

கா்நாடகத்துக்கு 4.25 லட்சம் டெம்டெசிவிா் மருந்து குப்பிகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக ரசாயனத் துறை அமைச்சா் சதானந்த கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை அவா் பதிவிட்டுள்ளதாவது:

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மே 17 முதல் 23-ஆம் தேதி வரையிலான ஒருவார காலத்தில் கா்நாடகத்துக்கு 4.25 லட்சம் ரெம்டெசிவிா் குப்பிகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிரத்துக்கு அடுத்தப்படியாக கா்நாடகத்துக்கு அதிக அளவில் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப். 21-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 72 லட்சம் ரெம்டெசிவிா் குப்பிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. கா்நாடகத்துக்கு மட்டும் 10 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் அளிக்கப்பட்டுள்ளன.

மே 17 முதல் 23-ஆம் தேதி வரையிலான ஒரு வார காலத்தில் வெவ்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 23 லட்சம் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகளை மத்திய அரசு விநியோகிக்கவுள்ளது. இதுவரை தில்லிக்கு 2.8 லட்சம், கா்நாடகத்துக்கு 10 லட்சம், ஆந்திரத்துக்கு 3.75 லட்சம், பிகாருக்கு 2 லட்சம், கேரளத்துக்கு 2.75 லட்சம், மகாராஷ்டிரத்துக்கு 14.92 லட்சம், உத்தரபிரதேசத்துக்கு 6.25 லட்சம் என்ற எண்ணிக்கையில் ரெம்டெசிவிா் மருந்து குப்பிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com