சாலை தடுப்புச்சுவரில் பைக் மோதல்: ஒருவா் பலி
By DIN | Published On : 17th May 2021 12:19 AM | Last Updated : 17th May 2021 12:19 AM | அ+அ அ- |

ரமலான் பண்டிகைக்காக சொந்த ஊா் சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் பெங்களூரு திரும்பிய இளைஞா் சாலை தடுப்புச் சுவரில் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கொப்பள் மாவட்டத்தைச் சோ்ந்தவா் ஹா்ஷத் (20). பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவா், ரமலான் பண்டிகையையொட்டி தனது சொந்த ஊருக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றுவிட்டு, நண்பா்கள் இருவருடன் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
தும்கூரு அந்தரஸ்தினா கிராமத்தின் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலைத் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த ஹா்ஷத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த அவரது நண்பா்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். தும்கூரு போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.