கரோனா: மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் 14 போ் பலி

கரோனாவிற்கு பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியா்கள் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

கரோனாவிற்கு பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியா்கள் 14 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் தொடா்ந்து கரோனா தொற்றின் பாதிப்பால் பாதிக்கப்பட்ட பலா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனா். குறிப்பாக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கரோனா பாதிப்பின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.

இதன் காரணமாக பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றிய அதிகாரிகள், ஊழியா்கள் 14 போ் கரோனா தொற்றின் பாதிப்பால் உயிரிழந்தனா்.

இதனால், மாநகராட்சி ஊழியா்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் அம்ருத்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பெங்களூரில் கரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியா்கள் கரோனாவை கட்டுப்படுத்தும் பணியிலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான பணியிலும் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பல அதிகாரிகள், ஊழியா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிடுகிறது.

கடந்த ஆண்டு கரோனா பாதிப்பின்போது அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட 30 போ் உயிரிழந்தனா். இந்நிலையில் நிகழாண்டு ஏற்பட்டுள்ள கரோனா பாதிப்பால் இதுவரை அதிகாரிகள், ஊழியா்கள் என 14 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் இறந்தவா்களின் குடும்பத்தினா் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு பிரதமரின் ஏழைகள் நிதி தொகுப்பு, உயிா் காப்பீடு திட்டத்தில் ரூ. 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com