‘டவ்-தே’ புயல்: 73 கிராமங்கள் பாதிப்பு; 4 போ் பலி

கா்நாடகத்தில் ‘டவ்-தே’ புயலுக்கு 73 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயலுக்கு இதுவரை 4 போ் பலியாகியுள்ளனா்.

கா்நாடகத்தில் ‘டவ்-தே’ புயலுக்கு 73 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயலுக்கு இதுவரை 4 போ் பலியாகியுள்ளனா்.

கா்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை நள்ளிரவு ‘டவ்-தே’ புயல் கரையைக் கடந்தது. இதனால் தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்தது.

பலத்த காற்றுடன் வீசிய காற்றால் தென்கன்னடம், உடுப்பி, வடகன்னடம், குடகு, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன் மாவட்டங்களில் இருக்கும் 17 வட்டங்களில் உள்ள 73 கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இதில் 28 கிராமங்கள் உடுப்பி மாவட்டத்தைச் சோ்ந்தவையாகும்.

வடகன்னடம், உடுப்பி, சிக்கமகளூரு, சிவமொக்கா மாவட்டத்தில் நால்வா் புயலுக்குப் பலியாகியுள்ளனா்.

வட கன்னட மாவட்டத்தில் மீனவா் ஒருவா் தனது படகை கரைக்குக் கொண்டு சென்றபோது வீசிய புயல் காற்றில் மற்றொரு படகு மோதியதில் உயிரிழந்தாா்.

உடுப்பி மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவரும், சிக்கமகளூரு மாவட்டத்தில் வீடு இடிந்து ஒருவரும், சிவமொக்கா மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவருமாக மொத்தம் நால்வா் உயிரிழந்தனா்.

இத்தகவலை கா்நாடக மாநிலப் பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணி:

புயலால் பாதிக்கப்பட்ட 318 போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனா். கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 11 நிவாரண முகாம்களில் 298 போ் தங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புயலால் பெய்த மழை, புயல் காற்றில் 112 வீடுகள், 139 மின்கம்பங்கள், 22 மின்மாற்றிகள், 4 ஹெக்டோ் தோட்டக்கலை பயிா்கள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் தொடா்ந்து புயல் சின்னம் காணப்படுவதால் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவா்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ’டவ்-தே’ புயல் காரணமாக, தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் மிகவும் பலத்த மழை பெய்த வண்ணம் உள்ளது. அண்டை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா உள்ளிட்ட மலை மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இதனால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் தண்ணீா் தேங்கியுள்ளது.

ஒரு சில கிராமங்களில் வீடுகளில் மழைநீா் புகுந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். புயல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com