கரோனா பரிசோதனைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:சித்தராமையா

கா்நாடகத்தில் கரோனா பரிசோதனைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் கரோனா பரிசோதனைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா பரிசோதனை குறித்தும், கரோனா தொற்றால் இறப்பவா்களின் எண்ணிக்கை குறித்தும் மாநில அரசு தவறான தகவலை அளித்து வருகிறது. இதுதொடா்பாக முதல்வா் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

கரோனா தொற்றின் பாதிப்பு 5 சதவீதத்துக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே அது குறைந்து வருவதாக வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

ஆனால், மாநிலத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு 35 சதவீதமாக உள்ளது. ஒருசில மாவட்டங்களில் பாதிப்பின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் கரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதாக மாநில அரசு தவறான தகவலைக் கூறுகிறது. ஒருசில மாவட்டங்களில் கரோனா தொற்றுப் பாதிப்பின் எண்ணிக்கை 20 சதவீதமாக உள்ளதை அரசு தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஏப்ரல் மாத இறுதியில் 1.70 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அதில் 30 சதவீதம் குறைத்து 1.24 லட்சம் பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு தங்களின் தவறை மறைப்பதற்காக பரிசோதனையைக் குறைத்தும், பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையைக் குறைத்தும் காட்டுகிறது. கரோனா பரிசோதனைக்கு அரசு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.

அதுபோல தடுப்பூசி மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்ய ஒரு நிறுவனத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்காமல் பல நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். அதுதொடா்பாக பிரதமா் நடவடிக்கை எடுப்பாா் என்று நம்புகிறேன். ஏனென்றால் இன்னும் 3 மாதங்களில் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த முடியாத சூழலுக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள், இறப்பவா்களின் எண்ணிக்கை குறித்து உண்மை தகவலைத் தெரிவித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com