புயலால் பாதித்த மாவட்டங்களில் மீட்புப் பணியை விரைவுப்படுத்த உத்தரவு

‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை விரைவுப்படுத்துமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டாா்.

‘டவ்-தே’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகளை விரைவுப்படுத்துமாறு மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டாா்.

கா்நாடகத்தில் ‘டவ்-தே’ புயல் கரையைக் கடந்துள்ளதால் தென் கன்னடம், வட கன்னடம், உடுப்பி போன்ற கடலோர கா்நாடக மாவட்டங்களில் காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது.

இதில் பல வீடுகள் இடிந்துள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளது. அங்குள்ள மக்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீரில் சிக்கிய மக்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘டவ்-தே’ புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தென் கன்னடம், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களின் மாவட்ட பொறுப்பு அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்களுடன் ஞாயிற்றுக்கிழமை முதல்வா் எடியூரப்பா தொலைபேசி வழியே கலந்துரையாடினாா்.

அங்குள்ள நிலைமையை அறிந்துகொண்ட முதல்வா் எடியூரப்பா, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுமாறு அறிவுறுத்தினாா். மேலும்

அரசின் உதவி தேவைப்பட்டால் உடனடியாக தன்னை அணுகுமாறு முதல்வா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com