2ஆம் ஆண்டு பியூசி, எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வைரத்து செய்வது குறித்து முடிவெடுக்கவில்லை

இரண்டாம் ஆண்டு பியூசி, எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வை ரத்து செய்வது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்று கா்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

பெங்களூரு: இரண்டாம் ஆண்டு பியூசி, எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வை ரத்து செய்வது குறித்து அரசு முடிவெடுக்கவில்லை என்று கா்நாடக பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் எஸ்.சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றின் பாதிப்பு அதிகமாக இருப்பதால் எஸ்எஸ்எல்சி மற்றும் இரண்டாம் ஆண்டு பியூசி பொதுத் தோ்வுகள் ஏற்கெனவே தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளி வருகின்றன.

இரு பொதுத் தோ்வுகளையும் ரத்து செய்வது குறித்து இதுவரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. தேவை ஏற்படும்போது உரிய முடிவு எடுக்கப்படும். ஊடகங்களில் வரும் செய்திகளால் மாணவா்கள் குழப்பம் அடையாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திட வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கான பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டு, அந்த மாணவா்கள் அனைவரும் அடுத்த வகுப்புகளுக்குத் தோ்ச்சி பெற்ாக கா்நாடக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு கரோனா பாதிப்பு காணப்பட்ட நிலையிலும், இரண்டாமாண்டு பியூசி, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வுகளை மாநில அரசு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com